செவ்வாய், 17 ஜனவரி, 2017

அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்..!

கடந்த 2016 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்களின் பட்டியலில் 123456 முதலிடம் பிடித்துள்ளது.
இணையதள ஹேக்கிங் நடவடிக்கைகளை தடுக்க பலர் பல்வேறு கடவுச்சொற்களை கணினிகளிலும், மொபைலிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிகமான பயனர்கள் பயன்படுத்திய கடவுச்சொல் 123456 என்பது கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் உலகின் டாப் 10 இடங்களில் உள்ள கடவுச் சொற்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதில் முதலிடத்தில் ‘123456’ இடம்பெற்றுள்ளது.
மேலும் கீ போர்ட்களில் காணப்படும் வரிசை ‘qwerty’என்பதையும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிய வந்துள்ளது