தமிழகம் முழுவதிலும் உள்ள 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிய கட்டண முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிவிப்பில், புதிய கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற 500 ரூபாயும், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கு 200 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை காலம் கடந்து புதுப்பித்தால் 300 ரூபாய் கட்டணமும், அதுவே ஓராண்டு தாமதமாகும் பட்சத்தில் 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகங்களை பதிவு செய்ய இனி 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆட்டோவை புதுப்பிக்க 225 ரூபாய் முதல் 625 ரூபாய் வரையும், அதுவே காலம் கடந்து புதுப்பித்தால் 3,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
பதிவு செய்த நாள் : January 07, 2017 - 07:31 AM