பெரும்பாலான ஊடகங்கள் அலங்காநல்லூரை விட்டு வெளியேறிய நிலையில் தொடர்ந்து 10 மணிநேரமாக உணவு, குடிநீர் இன்றி தொடர்ந்து போராட்டத்தை இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் மற்றும் எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகியோர் முகாமிட்டுள்ளனர், போராட்டத்தை கைவிட இளைஞர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் பெண்களும் இணைந்துள்ளனர்.
இதனால் அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.