திங்கள், 20 மார்ச், 2017

160 கோடி ஆண்டு பழமையான தாவரபடிமம் கண்டுபிடிப்பு

Fossil


பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப் படிமம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் கிடைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற படிமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள பாறையில் உலகின் மிகப் பழைமையான தாவர படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 160 கோடி ஆண்டுகள் பழமையான செந்நிறப் பாசி வகையை சேர்ந்த தாவர படிமமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழமையான செந்நிறப் பாசி தாவரம், 120 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது.
இதுகுறித்து ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்டெபான் பெங்ஸ்டன் தெரிவித்தபோது, “இப்போது கண்டுபிடிக்கப்பட்ட தாவர படிமம் குறித்து 100 சதவீதம் சரியாக எதுவும் சொல்ல முடியாது. இதில் டி.என்.ஏ இல்லை. ஆனால் படிமத்தின் பல அம்சங்கள் செந்நிறப் பாசியோடு ஒத்து போகிறது,” எனக் கூறினார். மேலும், பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதை கண்டறிய இந்த படிமம் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts:

  • டிப்ஸ் இளநீர் குடித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக… Read More
  • Quran சிலரை விட மற்றும் சிலரை ‪#‎அல்லாஹ்‬மேன்மைப்படுத்தியுள்ளதில்‪#‎பேராசை‬ கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள்பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு… Read More
  • Hadis நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின்கட்டளையைச்செயல்படுத்தியவண்ணமே இருப்பார்கள்.அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள… Read More
  • நீலகிரி சிக்கன் குருமா தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது)இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்தக்காளி - 1 (நறுக்கியத… Read More
  • Quran & Hadis நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர்ஒவ்வொரு நாளும் (தமது உடலிலுள்ள)ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம்செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும்ஒவ்வொரு துத… Read More