திங்கள், 13 மார்ச், 2017

மது – போதை இல்லாத தேர்தலா.. பஞ்சாபில் சிக்கிய 2600 கிலோ போதைப் பொருட்கள்.. 12 லட்சம் லிட்டர் மது!


பஞ்சாப் : பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது 2 ஆயிரத்து 600 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் 12 லட்சம் லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றபட்டுள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதில் பஞ்சாப் மற்றும் கோவா சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. பஞ்சாப் மாநில தேர்தலின்போது போதைப் பொருள் மற்றும் மதுப் புழக்கம் அதிகமாக இருந்தது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை நடத்தியது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைபெற்ற பிப்ரவரி 4ம் தேதி வரை சுமார் 18 கோடி மதிப்பிலான 2,598 கிலோ போதைபொருட்கள் கைபற்றப்பட்டன.
 

சுமார் 13 கோடி மதிப்பிலான 12 லட்சம் லிட்டர் மதுபானங்களும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றப் பட்டதாக பஞ்சாப் துணை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்ஸேனா தெரிவித்திருந்தார்.
அதேபோல சுமார் 58 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இதில் 38 கோடி போதிய ஆதாரங்கள் கொடுத்தவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 25 கோடியை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
பஞ்சாபில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. அங்கு தரன் தரன் பகுதியில் மட்டும் இரு அரசியல் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்துள்ளோம் என்று துணை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்ஸேனா தெரிவித்தார்.


source kaalaimalar