நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பழையபாளையம். இந்த கிராமத்தில் 7 கிணறுகள் அமைத்து மாதான திட்டம் என்கிற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை ஒஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இங்கு நிலத்தடி நீர் குறைந்து பொதுமக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனா். இந்த பிளாண்டை யாரும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 4 பேருக்கு மேல் கூடினாலே கைது செய்துவிடுவார்கள்.
இது குறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது-
வறட்சி காலத்தில் கூட இந்த பகுதியில் உள்ள குளங்கள், ஆறுகளில் நீர் வற்றாமல் இருக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நிலத்தடி நீர் குறைந்துவிட்டது.
ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த கிராமத்தில் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. அதில் மேலும் 10 இடங்களில் ஆழ் குழாய் அமைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.
இனி யார் இந்த கிராமத்தை காப்பாற்றுவா்கள்? நம் மாநிலம் எதை நோக்கிதான் செல்கிறது என்பது தெரியவில்லை?
மத்திய அரசு தமிழகத்தை தார் பாலைவனமாக மாற்றாமல் விடாது என்கிற பயம் அனைத்து மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.