சனி, 25 மார்ச், 2017

முன்னாள் எம்.பிக்களில் 80 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள்! March 25, 2017

முன்னாள் எம்.பிக்களில் 80 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள்!


முன்னாள் எம்.பிக்களில் 80 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு கேட்டது. 

அதற்கு முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியத்தை நிர்ணயிப்பது நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ள உரிமை என்றும் உச்சநீதிமன்றம் இதில் முறையிடுவது சரியில்லை என்றும் பதிலளித்துள்ளது.

ஓய்வு பெற்ற முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் சலுகைகள்: 

குறைந்தபட்ச ஒய்வூதியத் தொகை - மாதத்திற்கு
 ரூ. 20,000 

கூடுதல் ஒய்வூதியத் தொகை - மாதத்திற்கு ரூ. 1500 

முன்னாள் எம்.பி மறைவுக்குப் பிறகு குடும்பத்தாருக்கு 50 % ஓய்வூதியத் தொகை.

முன்னாள் எம்.பி ரயிலில் தனியாக பயணிக்கும் போது ஏசி முதல் வகுப்பில் செல்லலாம். 

முன்னாள் எம்.பியுடன் குடும்பத்தார் யாராவது பயணிக்கும் போது இருவருக்கும் ஏசி இரண்டாம் வகுப்பில் செல்லலாம்.

மத்திய அரசின் எம் பிக்கான மருத்துவத் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் முன்னாள் எம்பிக்களுக்கு செல்லுபடியாகும். 

ஒய்வு பெற்ற பிறகு எம். பிக்களுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டில் ஒரு மாதம் வரை தங்குவதற்கு அனுமதி.