கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர் ஜாமியா ஜும்மா மஸ்ஜிதின் கதவுகளை அடைத்தும் அதற்கு வரும் அனைத்து வழிகளையும் அதிகாரிகள் மறைத்து அங்கு ஜும்மா தொழுகை நடத்தப்படுவதை தடுத்துள்ளனர்.
அந்த மஸ்ஜிதில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கவும் கூட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து ஜாமியா மஸ்ஜிதின் மெளலவி முஹம்மத் யாசின் கூறுகையில், மஸ்ஜிதிற்கு செல்லும் அணைந்தது சாலைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இது மோடி அரசின் கடுமையான போக்கு என்று கூறினார் !
காவல்துறையினர் மற்றும் ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி நோக்கி செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், தெற்கு கஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் அரச படைகளால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் மக்கள் போராட்டம் நடத்த இருந்ததையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு கஷ்மீரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து அவன்திபோரா பகுதியிலும் இரண்டு பேர் இராணுவத்துடன் நடந்த துப்பாகிச்சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
source: kaalaimalar