இந்தியரின் கடையை கொளுத்த முயற்சி.அமெரிக்காவில் உச்சகட்டத்தில் இனவெறி.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூசி கவுண்டியில் இந்தியர் நடத்தி வந்த கடையை கொளுத்த முயன்ற அமெரிக்கரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபின் அங்கு இனவெறிதாக்குதல்கள் தலைவிரித்தாடி வருகின்றன. அண்மையில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த பெண் என்ஜினியர் ஒருவரை உடனடியாக அமெரிக்காவைவிட்டு ஓடிவிடு என அமெரிக்க ரவுடி ஒருவர் மிரட்டிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே போன்று இனவெறி தாக்குதல்கள், பிற மதத்தினர் மீதான தாக்குதல்கள் என தொடர்ந்து அமெரிக்கா ரணகளமாகி வருகிறது.
அமெரிக்காவில் வாழ்வதே கேள்விக்குரியதாகி விட்டதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர்
இந்த நிலையில், புளோரிடா மாநிலத்தின் செயிண்ட் லூசி கவுண்டியில் இந்தியர் நடத்தி வரும் கடையை ரிச்சர்டு லாயிட் என்ற அமெரிக்கர் தீயிட்டுக்கொளுத்த முயன்றார். ஆனால் உடனடியாக அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
ரிச்சர்டு லாயிட் மனநிலம் பாதிப்பட்டவர் இல்லை என்றும் . அவரது குற்றம் இன வெறி தாக்குதலா என்பது குறித்து அட்டார்னி ஜெனரல் அலுவலகம் விசாரித்து தெரிவிக்கும் என அவரை கைது செய்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.