பாகிஸ்தானின் வர்த்தக மையமான கராச்சியில் பெண்களுக்கான பிரத்தியேக டாக்சி சேவையை தொடங்கயுள்ளது ஒரு தனியார் நிறுவனம்..
இந்தச் சேவையில் டாக்சியை ஓட்டும் ஓட்டுனர்கள் கூடப் பெண்கள்தான். இதனால் பெண் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கராச்சி நகர வள மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்தில் பயணிக்கும் 55 சதவிகித பெண்கள் பாலியல் வன்முறைகளை சந்திப்பதாக கூறப்பட்டது. மேலும் பல மாவட்டங்களில் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பே இல்லை என்ற தகவலும் வெளியானது. இதையடுத்து பெண்களின் பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதற்காவே இதை அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது அந்த தனியார் நிறுவனம்.
ஆனால், பேருந்தைக் காட்டிலும் டாக்சிக்கு பொதுவாக கட்டணம் அதிகம். பணக்காரப் பெண்களுக்கு மட்டுமே உதவும் இது போன்ற சேவைகளால் பெண்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தி விட முடியாது என்கிறார்கள் கராச்சியில் உள்ள பெரும்பாலான பெண்கள்.
பதிவு செய்த நாள் : March 23, 2017 - 04:11 PM