ஆளும் கட்சியான சமாஜ்வாடி, யாதவர் ஓட்டுகளை நம்பியே களமிறங்கியது. ஆனால், பாஜக, யாதவர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. இதுவும் பாஜக வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். ஒரு முஸ்லீம் வேட்பாளர்களை கூட நிறுத்தாத பாஜகவுக்கு முஸ்லீம்கள் அதிக அளவில் வாக்களித்துள்ள தகவலும் தெரிய வந்துள்ளது.
2012 தேர்தலில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் வெறும் 22.1 சதவிகித வாக்குகளை மட்டும் பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 39.1 சதவிகித வாக்குகளைப் பெற்று தங்களைப் பலமாக்கியுள்ளது. அதாவது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள 59 தொகுதிகளில் பாஜக 39 தொகுதிகளை இப்போது கைபற்றியிருக்கிறது. இது, முஸ்லீம் ஓட்டுகளை குறி வைத்திருந்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணியும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இப்படியொரு கருத்து இருந்தாலும், ’முஸ்லீம் ஓட்டுகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் பிரிந்ததால், பாஜக எளிதாக இந்தத் தொகுதிகளில் வென்றது’ என்றும் கூறப்படுகிறது.
பதிவு செய்த நாள் : March 12, 2017 - 08:57 AM