ஞாயிறு, 12 மார்ச், 2017

​வெயிலின் தாக்கத்தால் பால் வெட்டும் தொழில் முடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் ரப்பர் முக்கிய பங்கு வகிக்கிறது. அருமனை, ஆறுகாணி, களியல், ஆலன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்களும், விவசாயிகளும் உள்ளதால் ரப்பர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இலையுதிர் காலம் நிலவுவதால், ஏப்ரல் மாதத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழிலை தொடங்குவர். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருவதால், ரப்பர் மரங்களில் பால் வரத்து குறைவாக இருப்பதாகவும், தங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.