புதன், 1 மார்ச், 2017

தீவிரமடையும் நெடுவாசல் போராட்டம் - மதுரையில் மாணவர்கள் கைது

Image may contain: 1 person, sitting
Image may contain: 5 people, people sitting
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட மதுரை மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் விளை நிலங்கள் பாழாகும் என்றும், அதனால் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி நெடுவாசலில் கடந்து 14 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இத்திட்டத்தை கைவிடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனத் சாதித்து வருகின்றன.இதனால் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.
அதே நேரத்தில் இந்த போராட்டங்களை ஒடுக்க காவல் துறையினர் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றன.குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் போன்றோரை நெடுவாசல் பகுதிக்கு செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர்,
மாணவர்களை கைது செய்வதும், அவர்களை கேவலமாக பேசிவருவதும் என காவல்துறையின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் பின்னர் கைது செய்தனர்,
அப்போது காவல்துறையினர் அராஜகம் ஒழிக என மாணவர்கள் முழக்கமிட்டனர்....நெல்லை நிதிமாறன்