புதன், 22 மார்ச், 2017

வைபைக்குப் பதில் லைபை வருகிறது.!

இன்று உலகில் இலவசமாக வைபை இணைப்புக்கள் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவோர் ஏராளம்.
வைபை இணைப்புக்களை முறியடித்து இன்று லைபை வசதி அறிமுகமாகியுள்ளது. லைபை எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணைய இணைப்பினை உருவாக்குவதாகும்.
மின்குமிழ்களின் ஊடாக தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய இத்தொழில் நுட்பமானது வைபையைப் போல பன்மடங்கு வேகத்தினைக் கொண்டதாக இருக்கிறது. இது இன்று நாம் பயன்படுத்தும் இணைப்புகளை விட 100 மடங்கு வேகமாக இருக்கும் என்று நெதர்லாந்தில் உள்ள தொழில்நுட்ப எயிண்டோவேன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லைபை தொழில்நுட்பத்தில் எல்இடி மின்விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த லைபை வசதியின் மூலம் 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ளமுடியும். அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி இந்தப் புதிய லைபை உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லைபை சாத்தியம் என்று கூறப்படுகிறது. தற்போது வரைக்கும் பரிசோதனை முயற்சியில் இருக்கும் இத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் இணைய உலகில் அது மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும்.