March 13, 2017,
வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியில் உள்ள சதுப்பேரியின் கரையை உடைத்து நெடுஞ்சாலை அமைத்ததால் ஏரிக்கு நீர்வரும் வழி அடைபட்டுள்ளதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாற்றம்பள்ளியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவுகொண்ட சதுப்பேரி, கடந்த இருபது ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும்போது சதுப்பேரியின் கரைகளை உடைத்துத் தரைமட்டத்தில் தார்ச்சாலை அமைத்ததால் ஏரியில் நீர் தேங்குவதில்லை. அத்துடன் ஏரிக்கு நீர்வரும் பாதையும் அடைபட்டு விட்டதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன.
இந்நிலையில் ஏரியைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தேசியநெடுஞ்சாலையில் மிகப் பெரிய சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார்