புதன், 8 மார்ச், 2017

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்!

8/3/2017, தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 8/3/2017 தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவர்கள் பங்கேற்கின்றனர். S.S.L.C தேர்விற்காக தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் மட்டும் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51 ஆயிரத்து 658 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். 

Related Posts: