சனி, 4 மார்ச், 2017

மீத்தேன்? அமெரிக்க பொறியாளர் அலறுகிறார்:பெரிய சதி:

நெடுவாசலில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே!?
ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஹைட்ராலிக் ப்ராக்சரிங், ஈத்தேன், புரபேன் என நீளும்  அறிவியல் எளிய மக்களின் மொழியில் இல்லை.
CH4, C2H6, C3H8 எனத் தொடுக்கப்படும் அறிவியல் தாக்குதல்களுக்கு, விவசாயம், நிலத்தடி நீர், வாழ்வாதாரம் என உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமே இதுவரை எதிர்த் தாக்குதல்களாக இருந்திருக்கிறது.
குழம்பிக்கொண்டிருக்கும் குட்டையைத் தனி மீனாய் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார் ஒரு தமிழ் இளைஞர்.
ஹைட்ரோ கார்பன் நெடுவாசல் மீத்தேன்”
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறோம்” என்ற பெயரில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும்,  அதைக் கொண்டு பொருளாதார லாபம் பார்க்க நினைக்கும் அரசாங்கங்களுக்கும் தமிழர்களின் சார்பான சம்மட்டி அடியாக இருக்கிறது.
அமெரிக்காவில் எட்டாண்டுக்காலம் பொறியாளராக இருந்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பியவர் பிரேமானந்த் சேதுராஜன்.
“Lets Make Engineering Simple” என்ற பெயரில் பெரும் அறிவியல் முடிச்சுகளையும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில் வீடியோக்களாக எடுத்து யூட்யூபில் பதிந்து வருகிறார்.
நீங்கள் ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?
 இன்று உலகின்  46% மின் தேவைகள் ஹைட்ரோ கார்பன் மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. அறிவியல் சூழ்ந்த இந்த உலகில் ஹைட்ரோ கார்பனை நாம் எதிர்க்கத் தேவையில்லை.
ஆனால், ஹைட்ரோ கார்பனை எடுக்கும் “ஹைட்ராலிக் ப்ராக்சரிங்” முறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.” காரணம் இன்று நெடுவாசல் மட்டும் தானே என்று அசட்டையாக இருந்து விட முடியாது.
நாளை தஞ்சை மற்றும் எங்கெல்லாம் மீத்தேன் கிடைக்குமோ அங்கெல்லாம் குழிபறிக்க ஆரம்பிப்பார்கள்.
விளைநிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொளள்ள வேண்டும்.
விலை நிலங்கள் பாலைவனங்களாக மாறி விட்டால் காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா தண்ணீர் கேட்டுப்  போராட வேண்டியதில்லை.
காரணம் விளைவதற்கு நிலமே இருக்காது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் தேவையில்லை. காரணம் மாடுகளின் அவசியம் இல்லை.
பன்றி மரபணு மூலம் உருவான பீட்டா மாடு போதும். நமக்கு தேவை குடிக்க எதோ ஒரு பால். அதை பீட்டா போன்ற ஆபத்தான அமைப்புகள் பார்த்துக் கொள்ளும்.
ஆடுகளும் தேவை இல்லை. பன்றி மரபணு மாட்டின்கறியும்  டின்களில் அடைத்து விற்பனைக்கு வந்து விடும்.
இப்படி வெளிநாட்டு வியாபார அமைப்புகளின் படு ஆபத்தான  திட்டம் தான் இந்த மீத்தேன் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் வேண்டும். ஆனால் அதை எடுக்கும் “ஹைட்ராலிக் ப்ராக்சரிங்” வேண்டாம் என்றால் எப்படி?
இங்குதான் நாம் பின்தங்கிவிடுகிறோம். உணர்ச்சிமயமாக  இருக்கும் நம் போராட்டத்தை  அறிவியல் பூர்வமாக மாற்ற வேண்டியது இங்குஹைட்ரோ கார்பன் நெடுவாசல் மீத்தேன் தான்.
அரசின் நோக்கம் ஹைட்ரோ கார்பனை எடுத்து எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு ஹைட்ராலிக் ப்ராக்சரிங் அவசியமற்றது.
உலகளவில் பல நாடுகளில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கெடுதல் ஏற்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால், அதற்கு பதிலாக எளிய முறையில் நம்மிடம் கொட்டிக்கிடக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்க முடியும்.
இந்த முறையில் எடுத்தால் விவசாயம் காப்பாற்றப்படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை வளர்க்கவும் முடியும். அந்தப் பொக்கிஷம் வேறொன்றுமல்ல ‘குப்பை’.
குப்பையா?
ஆமாம். அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மக்கும் குப்பையிலிருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன.
ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவிற்கான குப்பைகளை இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது.
அமெரிக்காவில் “லேண்ட்ஃபில்” (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.
1 டன் குப்பை = 40கிலோ மீத்தேனுக்கு சமமாகிறது = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
சென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பை குவிகிறது. இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகளில் ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.
1 நாள் = 1 லட்சம் டன் குப்பை = 40 லட்சம் கிலோ மீத்தேன் = 2 லட்சம்  எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
அதுமட்டுமல்லாமல், மொத்தம் மத்திய அரசு 44 இடங்ககளில் “ஹைட்ராலிக் ப்ராக்சரிங்” கொண்டு வந்து அதன் மூலமாக 1 பில்லியன் கிலோ அளவிற்கான மீத்தேனை எடுக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.
ஆனால், இந்தக் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப்படுத்தினால் 1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு 90லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும்.
அதுகொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக நம்மால் மாற்ற முடியும். “
நெடுவாசல் மீத்தேன்”
ஸ்வீடன், ஜெர்மனி போன்ற சிறிய நாடுகளுக்கு சரி. இந்தியாவில் இது சாத்தியப்படுமா?
மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் இதை மிகச் சரியாக செயல்படுத்த முடியும். ஸ்வீடன் குப்பைகளை இறக்குமதி செய்கிறது.
நம் நாட்டில் அளவுகடந்த குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தக் காலத்திலேயே நம் விவசாயிகள் வீட்டுக்குப் பின்னாடி குப்பைகளையும், சாணங்களையும் கொண்டு இயற்கை எரிவாயுக்களைத் தயாரித்தவர்கள்.
“ஹைட்ராலிக் ப்ராக்சரிங்” என்ற அரக்கனை விட்டுவிட்டு, இந்த மாற்றுத் திட்டத்தைக் கொண்டு போய்ப் பாருங்கள் விவசாயிகள் இதை எப்படி வரவேற்கிறார்கள் என்று…”
ஹைட்ராலிக் ப்ராக்சரிங்கை விட இந்தத் தொழில்நுட்பம் அதிக செலவு பிடிக்குமோ?
” கட்டுமான செலவுகளை ஒப்பிடும்போது சிறியளவிலான வேறுபாடு இருக்கும்தான். ஆனால், அதையும் தாண்டி இயற்கை உரங்கள் தயாரிப்பது, விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் வரும் உபரி வருமானம் அதை ஈடுசெய்துவிடும்.
எல்லாவற்றுக்கும் மேல் இந்தத் திட்டத்தின் மூலம் பூமி வெப்பமயமாதலையும் குறைக்க முடியும்” என்று நிதானமாகச் சொல்லிமுடிக்கிறார் பிரேம்.
“என்னவென்றே புரிந்துகொள்ளாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் நீங்கள் என்ன விஞ்ஞானிகளா?” என்று கேள்வி கேட்ட அரசியல்வாதிகளுக்கான பதில் பிரேமிடம் இருக்கிறது.
http://kaalaimalar.net/oh-methane/