19/3/2017-புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகேயுள்ள வாணக்கன்காடு பகுதியில், ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த எரிவாயு குழாயால் 10-க்கும் மேற்பட்டோர் புற்று நோய் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் சோதனை நடத்தப்பட்டு அந்த இடத்தை தற்காலிகமாக மூடிவிட்டு சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் எண்ணெய் வெளியேறி வருவதுடன் அடிக்கடி தீப்பற்றி எரிந்து வருகிறது. கிணற்றிலிருந்து வெளிவரும் எண்ணெய் படலத்தால் கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன.
மேலும், அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.