ஞாயிறு, 19 மார்ச், 2017

நியூஸ் 7 செய்தியின் எதிரொலியாக தோல் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு!

நியூஸ் 7 செய்தி எதிரொலியாக, ஓமலூர் சரபங்கா நதிக்கரையின் ஓரத்தில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

ஓமலூர் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் தோல் கழிவுகள் மற்றும் தோல் உப்புநீர் ஆகியவற்றை, சரபங்கா ஆற்றில் கொட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆதாரங்களை சேகரித்த அதிகாரிகள், நதியை அசுத்தம் செய்யும் தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

Related Posts: