கடந்த 4 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் காலை நாளிதழ் ஒன்றை திட்டமிட்டு முடக்கிவிட்டதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் மீது பாதிக்கப்பட்ட பத்திரிகையின் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி கே.டி.சி நகரை சேர்ந்த பத்திரிகையாளர் ராமலிங்கம் கடந்த 4 ஆண்டுகளாக ‘தினதரணி’ என்ற காலை நாளிதழை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி தினதரணி நாளிதழில், மாவட்ட ஆட்சியர் கருணாகரன் குறித்து சமூக வலைதளங்களில் வந்த செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆட்சியர் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன், பத்திரிகை உரிமையாளர் ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது குறித்து உரிமையாளர் ராமலிங்கம் சரியான விளக்கம் அளித்தும், ஆட்சியருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கூறி, அதிகாரிகள் மூலம் மிரட்டல், மின் இணைப்பு துண்டிப்பு என தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. உரிய விளக்கம் அளித்த பிறகும், கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் நெல்லை கேடிசி நகரில் உள்ள ராமலிங்கத்தின் தினதரணி நாளிதழ் இயந்திரத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கு நாளிதழின் உரிமையாளர் ராமலிங்கம் கண்டனம் தெரிவித்ததுடன், பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கும் நோக்கில், ஆட்சியர் கருணாகரன் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.