புதன், 22 மார்ச், 2017

இங்கு மகளிர்க்கு என்று ஒரு நாள் இல்லை. ஒவ்வொரு நாளும் மகளிருக்கே!

பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுக்கச் சொன்ன மார்க்கம்.
இரண்டு பெண் குழந்தைகளை பெற்று அவர்களை கண்ணியமாக வளர்த்த பெற்றோர்கள் சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்கள் என்று நன்மராயம் கூறியவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).
வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தந்த இஸ்லாம்.
பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று தடை விதித்த இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).
திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தமே அன்றி மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல என்று சட்டம் இயற்றிய இஸ்லாம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று தாய்மைக்கு பெருமை சேர்த்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).
உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று உபதேசித்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).
மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் கணவன் மீது மனைவிக்கும் உள்ளது என்று பெண்களின் உரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.
கணவனை இழந்த பெண்கள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விதவைகளுக்கு மறுதிருமணம் செய்ய வலியுறுத்தியவர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல் ).
இங்கு மகளிர்க்கு என்று ஒரு நாள் இல்லை.
ஒவ்வொரு நாளும் மகளிருக்கே!

Related Posts: