செவ்வாய், 14 மார்ச், 2017

அது தற்கொலை இல்லை கொலைதான் ? தலித் என்பதால் கொலை செய்யபட்டிருக்கலாம் ? சங்க்பரிவாரின் சதியா ? பெற்றோர்

டில்லி ஜவர்கர்லால் நேரு பல்கலையில் பிஹெச்டி படித்து வந்த சேலம், சாமிநாதபுரத்தை சார்ந்த தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை கேள்விப்பட்ட முத்துகிருஷ்ணன் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். முத்துகிருஷ்ணன் சகோதரி கூறுகையில், தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு முத்துகிருஷ்ணனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நேற்று கூட எங்களிடம் போன் செய்து நல்ல முறையில் பேசினார். அவர் சாவில் மர்மம் உள்ளது, என்றார்.
முத்துகிருஷ்ணன் சாவில் மர்மம் உள்ளது என கூறி, சேலம் நான்குரோடு சந்திப்பில் மாணவர்கள் அமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நள்ளிரவில் மறியல் போராட்டம் நடத்தி, தங்கள் எதிர்பை வெளிப்படுத்தினர்.
முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், டில்லி மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ள முத்துகிருஷ்ணன் உடலை பார்க்கவோ, விசாரணை செய்யவோ பல்கலை சார்பில் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘பல்கலையில் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்துவது இல்லை’ என்று தனது வலைதள பக்கத்தில் முத்துகிருஷ்ணன் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  பல்கலையில் தலித் மாணவர் சேர்க்கை தொடங்கி அனைத்து நிலைகளிலும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



source: http://kaalaimalar.net/phd-student-death/