வெள்ளி, 17 மார்ச், 2017

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்கலாம் என மாநில நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லை எனில், அடுத்த மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது என நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.
 
இந்நிலையில், சென்னை லாயிட்ஸ் காலனி மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் உள்ள அமுதம் மற்றும் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ்,  ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கா விட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் கிடைக்கும் என தெரிவித்தார். 

மேலும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க, காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை எனவும் அவர் கூறினார். பொருட்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்றும் காமராஜ் குறிப்பிட்டார்