திங்கள், 20 மார்ச், 2017

காங்கிரஸ் மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

காங்கிரஸ் மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்


20/03/2017 காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு பாஜகவிற்கு இணையாக இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பிற்கு இணையாக இல்லை என தெரிவித்தார். 

இதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் மக்களிடம் சிறப்பான முறையில் பிரச்சாரம் செய்து அதிக ஓட்டுகளை பெற முடிகிறது என்று கூறினார். எனினும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதிமுக என மாநிலக் கட்சிகளைப் போல் பாஜகவின் கட்டமைப்பு சிறப்பாக இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார். 

ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு கிடைத்த ஆதரவால் உ.பி.தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என்றால் பஞ்சாபில் அடைந்த தோல்விக்கு ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு எதிர்ப்பு என கருதலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Posts: