வியாழன், 2 மார்ச், 2017

தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் சிசேரியன்கள்

தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் முறையிலான குழந்தை பிறப்பு அதிகரித்துள்ளது என்று‌ தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் பணத்துக்காக சிசேரியன் முறையை கர்ப்பிணிகள் மீது நிர்பந்திப்பதாக CHANGE.ORG என்ற அமைப்பு சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் தெரிவித்தது. அவரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இருந்தார். இந்த நி‌லையில் மும்பையில் தனியார் மருத்துவமனைகளில் 2010 ஆம் ஆண்டு 21 ஆயிரமாக இருந்த சிசேரியன்களின் எண்ணிக்கை, 2015 ல் 34 ஆயிரமாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.