வியாழன், 2 மார்ச், 2017

வங்கிகளில் ரொக்க பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி! March 02, 2017

வங்கிகளில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம் மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சேமிப்பு மற்றும் சம்பள வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். அதே போல் நான்கு முறை மட்டுமே ரொக்கமாக ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கலாம். 

அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ரொக்க பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ICICI, AXIZ, HDFC உள்ளிட்ட வங்கிகள் அறிவித்துள்ளன. பணப் பரிவர்த்தனையை கட்டுப்படுத்தி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியார் வங்கிகளின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

new gen media