ஞாயிறு, 19 மார்ச், 2017

குடிநீர் பற்றாக்குறையை தாங்களே சரி செய்த மேட்டுப்பாளையம் மக்கள்!




மேட்டுப்பாளையம் அருகே கிராம மக்களின் முயற்சியால் தூர்வாரப்பட்ட குட்டையில், மழைநீர் சேகரிப்பால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேவையான குடிநீர் பற்றாகுறை தீர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள குட்டையை, அப்பகுதி மக்களே இணைந்து தூர்வாரி சீரமைத்தனர். இந்த நிலையில் அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அக்குட்டையில் மழைநீர் கடல்போல் தேங்கி உள்ளது. இதனால், குடிநீர் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Posts: