ஞாயிறு, 19 மார்ச், 2017

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்!

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்!


நாடு முழுவதும் சுமார் 60 சதவீத பொறியாளர்கள் ஆண்டுதோறும் வேலையில்லாமல் தவிப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், சுமார் 20 லட்சம் பொறியாளர்கள் ஆண்டுதோறும் வேலையின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளது. முறையற்ற கல்லூரி நிர்வாகம், அடிப்படை வசதியின்மை, தகுதியற்ற ஆசிரியர்கள் போன்ற காரணங்களால், பொறியியல் படிப்பின் தரம் குறைந்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நுழைவுத் தேர்வுகளை தரமாக மாற்றுவதும், ஒரே தேர்வு என்ற முறையில் தரமான வழிமுறைகளை கையாள்வது தான் சிறந்த பொறியாளர்களை உருவாக்கும் என்றும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வருங்காலத்தில் எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கைகள் இந்த நிலையை மாற்றும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts: