வியாழன், 16 மார்ச், 2017

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு டெல்லியில் மாணவர்கள் எதிர்ப்பு!

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு டெல்லியில் மாணவர்கள் எதிர்ப்பு!


மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்த முத்துகிருஷ்ணன் தந்தைக்கு ஆறுதல் கூறினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில்  உடற்கூறு ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்கு வந்த மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் நிர்மலா சீதாராமன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் முத்துக்கிருஷ்ணன் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறினர். 
அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, முதல் தகவல் அறிக்கை அளிக்காத காரணத்தினால் உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து F.I.R பதிவு செய்து நகல் அளிக்க உத்தரவிட்டனர். 

அப்போது அரசு சார்பில் முத்து கிருஷ்ணன் சகோதரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முத்துகிருஷ்ணனின் தந்தை சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.