வியாழன், 16 மார்ச், 2017

கணினி திறனில் பின் தங்கும் இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்

இந்திய கிராமங்களில் கணினி இயக்கும் திறன் படைத்தவர்கள் 8.8 % மட்டுமே உள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது.  

அதாவது இந்திய கிராமங்களில் 7 கோடி 33 லட்சம் பேர்கள் மட்டுமே கணினி இயக்கும் திறன் கொண்டவர்கள். அதேபோல் இந்திய நகரங்களில் 30.2 சதவிகிதத்துடன் சுமார் 11 கோடி 38 லட்சம் பேர் கணினி இயக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். 

மாநிலங்களின் மக்கள் தொகை சதவிகிதத்தின் அடிப்படையில் கேரளா முதலிடத்தில் உள்ளது கிராமங்களில் 32.2 சதவிகிதத்துடன் சுமார் 56 லட்சம் 17,000 பேர் கணினி இயக்கும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். அதேபோல் நகரங்களில் 40.6 சதவிகிதத்துடன் சுமார் 64 லட்சம் 68,000 பேர் கணினி இயக்கும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். 

தமிழ்நாடு இதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கிராமங்களில் 15.8 சதவிகிதத்துடன் சுமார் 58 லட்சம் 75,000 நபர்களும், நகரங்களில் 30.8 சதவிகிதத்துடன் சுமார் 1 கோடி 7 லட்சம் பேர் கணினி இயக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

நாட்டில் சத்தீஸ்கர் இந்த வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. கிராமங்களில் 2.9 சதவிகிதத்துடன் 5 லட்சம் 68,000 பேர் கணினி இயக்கும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். நகரங்களில் 21.1 சதவிகதத்துடன் சுமார் 12 லட்சம் 52,000 நபர்கள் கணினி இயக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.