செவ்வாய், 27 மார்ச், 2018

பல அவதூறுகள், வசைச் சொற்கள், குற்றச்சாட்டுகள், வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறிவருகின்றன.

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அன்பிறகினிய கொள்கை சொந்தங்களே!
தற்பொழுது ஊடகங்கள் வாயிலாக பல அவதூறுகள், வசைச் சொற்கள், குற்றச்சாட்டுகள், வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறிவருகின்றன. இவைகளைக் காணும் பொழுது மனம் பெரும் வேதனையடைகின்றது. சொல்ல முடியாத துக்கம் ஏற்படுகின்றது. கண்கள் கண்ணீரை வடிக்கின்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது தனி ஒரு நபராலோ அல்லது ஒரு குழுவாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊர் மக்களாலோ வளர்க்கப்பட்டது அல்லது உருவாக்கப்படடது அல்ல. இதற்காக பல சகோதரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். பல ஆயிரக்கணக்காணோர் சிறை சென்றுள்ளார்கள். தற்பொழுது நாம் ஒரு நாள் பகல் பொழுது மட்டும் சிறை செல்வது போல் அல்ல. பல நாட்கள், பல மாதங்கள், 2004 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட FIR னால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கு இன்று வரை நடந்துவருகின்றது. கோர்ட்டும், வழக்கறிஞர் அலுவலகமும் என்று அழைந்து வருகின்றனர். இந்த ஜமாஅத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஏகத்துவ சகோதரனுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம் சகோதரர்கள் பலர் இத்தனை ஆண்டுகள் மேற்கூறப்பட்ட தியாகங்களால் வளர்த்த ஜமாஅத்தை இஸ்லாத்தின் எதிரிகள் மற்றும் ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் பலன் பெரும் வகையில் எவ்வளவு கீழ் இறங்கி தரம் தாழ்ந்து தங்களது வெறுப்பை பதிவு செய்து வருகின்றனர்.
மாநில நிர்வாகிகள் யாரும், இறைத்தூதர்களோ அல்லது மலக்குகளோ அல்ல. மலத்தை தன் வயிற்றில் சுமந்துவரும் சாதாரண மனிதர்கள் தான். ஆரம்ப மனிதனே தவறு செய்தவன்தான். (தவறுசெயதார்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை) ஆனால் பல சகோதரர்கள் இதனை அறியாமல் கோபத்தினால் ஏற்படக்கூடிய வசைகளையும், மற்றவர்கள் செய்யும் அவதூறுகளையும் ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் நாம் ஒரு கருத்தை பொது வெளியில் கொண்டு செல்லவேண்டுமானால், நாளிதழ், தொலைகாட்சி, வானோலி போன்றவைகளின் மூலம் தான் கொண்டு செல்ல முடியும். அதற்கு ஏற்படும் செலவு லட்சக்கணக்கில் வரும். ஆனால் இன்று அவ்வாறல்ல. எந்த செலவும் இன்றி தான் விரும்பியதை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்ல முடிகின்றது.
இந்த வசதியை நன்மைக்கு பயன் படுத்தாமல், தமிழகத்தில் ஏகத்துவத்தின் கோட்டையாகத் திகழ்கின்ற ஜமாஅத்தின் மீது பழி சுமத்தி அழிக்க நினைக்கின்றார்கள். இந்த ஜமாஅத் அழிந்து போனால் வேறு நல்ல ஜமாஅத் இருக்கின்றதா? அல்லது புதிதாக விலக்கப்பட்டவர்களும், அதிர்ப்தியாளர்களும் ஒன்று சேர்ந்த ஒரு நல்ல ஜமாஅத்தை உருவாக்க முடியுமா? அவ்வாறு கூறி உருவாக்கியவர்களின் நிலை தற்பொழுது என்ன? என்பது நமக்குத் தெரியாதா? கண் முன் இருப்பதைக் கட்டமைக்க வாருங்கள்.
நீங்கள் பதிவிடும் தகவல்கள் ஜமாஅத்தின் வளர்சச்சிக்கு உதவுமானால் நன்றாகப் பரப்புங்கள். அந்த பதிவு ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விலைக்குமனால் அல்லாவிற்காக அந்த பதிவைத் தவிர்த்துவிடுங்கள். சில நேரங்களில் நாம் நல்லது என்று நினைப்பது உண்மையில் தவறாத் இருக்கலாம். ஒரு வேளை அவை உண்மையாகவும் இருக்கலாம். பலர் கூடி தவறு என்று தீர்ப்பும் கூறலாம். அல்லாஹ் ஒருவன் தான் தீர்ப்பளிப்பதில் உண்மையாளன். மனிதன் தவறு செய்பவன் தான். இதனை உணராமல் இந்த ஜமாஅத்தை உருவாக்கப்பாடு பட்டவர்களும், நேரத்தையும், பொருளையும், குடும்பத்தையும் தியாகம் செய்தவர்களும் தங்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் பொழுது அனைத்தையும் மறந்து பொது வெளியில் நாற்றத்தை வீசுகின்றார்கள். நம்மை இந்த ஜமாஅத்தில் இருந்து யாரும் விரட்ட முடியாது. நாம் உருவாக்கிய ஜமாஅத். மனிதன் என்ற வகையில் பாதிப்பு ஏற்படும் பொழுது கோபமும், விரக்தியும், சோர்வும் ஏற்படுவது இயல்பு. அந்த கோபத்தை சில மாதங்கள் அடிக்கி வைக்கமுடியாதா? மேடைகள் தோறும் பொருமை பொருமை என்று மக்களுக்கு பயான் செய்கின்றோமே! அந்த பொருமை நமக்கு இல்லையா? எத்தனை பேருக்கு நாம் பஞ்சாயத்து செய்திருக்கின்றோம். அது நமக்கு இல்லையா? நமக்கு ஒரு பாதிப்பு என்றால் குமுறி எழுகின்றோம். அதைவிட மோசமான பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டால் பொருமையாக இருங்கள், வெற்றி நிச்சயம் உங்களுக்குத்தான் என்று அறிவுரை கூறுகின்றோம். பதிவியும் மேடையும் கிடைக்காவிட்டால் என்ன? பொருத்துக்கொள்ள முடியாதா? ஒவ்வொரு விநாடியும் ஏகத்துவம் ஏகத்துவம் என்று மேடை போட்டுபிரச்சாரம் செய்கின்றோமே இதுதான் ஏகத்துவமா?
நாம் கூடி எதைச் செய்தோமோ அதைப் பொது வெளியில் அம்பலப்படுத்தி நாசமாக்குகின்றோம். நம் கண் முன் எதிரே நடக்கும் தவறான முடிவுகளை முகஸ்துதிக்காகவும் தக்லீது செய்தும் ஏற்கின்றோம். எத்தனை சகோதரர்கள் மீது நமக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று எடுக்கப்பட்டது. அப்பொழுது எல்லாம் வாயைக்கூட திறக்காமல் மவுனம் காத்து ஏற்றுக்கொண்டோமே!
அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே! இந்த இயக்கம் நமது இயக்கம்! நம்மால் உருவாக்கப்படட இயக்கம். சில சமயங்களில் பாதிப்புகள் எற்படும் பொழுது பொருமை காத்து மவுனம் சாதியுங்கள். நிச்சயம் உங்கள் ஜமாஅத் உங்களை நிரந்தரமாக நீக்க முடியாது? எதற்கும் ஒரு எல்லை உண்டு. விரைவில் நீங்கள் செய்த தியாகமும், சேவையும், ஒத்துழைப்பும் நிச்சயம் நினைவு கூறப்படும். தானாக முன்வந்து ஜமாஅத் உங்களை அரவணைக்கும். ஆனால் மனிதன் பொருமை இல்லாதவனாக இருக்கின்றான். இந்நாள் வரை சேமித்து வைத்திருந்த அனைத்தையும் ஒரு பதிவில் அழித்துவிடுகின்றான். எந்த அளவிற்கு தரம் தாழ முடியுமோ அதைவிட கீழ் இறங்கி நாற்றத்தை அள்ளி வீசுகின்றான். எனக்கு நினைவிற்கு வருகின்றது அன்று ஒருவர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சொற்றொடரைக் கூறினார். (இந்த ஜமாஅத்தை விட்டு யார் செல்கின்றானோ அவன் தருதலையாவான். நாசமாகப் போவான். இதற்கு தானும் விதிவிலக்கு அல்ல என்று) இதனை அனுபவப் பூர்வமாகப் பார்த்து அனுபவித்து வருகின்றோம்.
தயவு செய்து உங்களிடம் கெஞ்சிக் கேட்கின்றேன், வார்த்தைகளை அள்ளி வீசாதீர்கள். நீங்கள் வீசும் வார்த்தைகள் இனி மேல் நாம் ஒன்று கூட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. பிரிந்தவர்கள் ஒன்று கூட வேண்டும். நாம் செய்த தவரை உணர வேண்டும். உணர்ந்து அதற்கு ஏற்ற பரிகாரத்தைத் தேடவேண்டும். இதனால் நாம் கீழ் நிலைக்குப் பொவது இல்லை. இறைவனுக்காக இதனைச் செய்தால் நிச்சயம் இரு உலகிலும் இதற்குறிய பலன் உண்டு.
இறுதியா நினைவுபடுத்துகின்றேன். இந்த ஜமாஅத் நம்முடையது. நாம் வளர்த்த ஜமாஅத். எவையும் நிரந்தரமல்ல. அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதுவரை காத்திருங்கள். காலம் கனியும்.
- அப்துல் ஹமீது (பனைக்குளம்) மூத்த உறுப்பினர்