வியாழன், 16 மார்ச், 2017

தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் குறைவு: விலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 30 சதவீதம் மட்டுமே மாம்பழம் காய்க்க தொடங்கி உள்ளதால், மாம்பழ விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கரில் மாம்பழ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள செங்கோட்டை, இலஞ்சி, குற்றாலம், கடையநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாம்பழ சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது. இந்த வருடம் மே மாதம் தான் முறையாக மாம்பழ பருவம் தொடங்கும் என்று மாம்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொpவித்துள்ளனா;.  இதனால் இந்த வருடம் மாம்பழத்தில் விலை சற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.