சனி, 4 மார்ச், 2017

கடமையை சரியாக செய்யாத எம்பி, எம்எல்ஏக்களை திரும்ப அழைக்கும் மசோதா தாக்கல்

கடமையை சரியாக செய்யாத எம்பி, எம்எல்ஏக்களை திரும்ப அழைப்பதற்கு வழிவகை செய்யும் தனி நபர் மசோதாவை மக்களவையில் எம் பி வருண் காந்தி தாக்கல் செய்தார். 

மசோதா சொல்லும் தகவல்கள் என்ன..?

►இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பி அல்லது எம்எல்ஏவின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றால் அவரை மக்கள் திரும்ப பெறுவதற்கான மசோதா இது. 

►பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவரிடம் இது தொடர்பான மனுவை சம்பந்தப்பட்ட தொகுதியின் எந்த ஒரு வாக்காளரும் அளிக்கலாம். 

►மனுவின் நம்பகத்தன்மையை உர்ஜிதப்படுத்த பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு மனுவை அனுப்ப வேண்டும். 

►நம்பகத்தன்மை உறுதிப் படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட தொகுதியிலுள்ள 10 இடங்களில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

►வாக்குப்பதிவில் 75 சதவிகிதம் மக்கள் சம்பந்தப்பட்ட எம்பி அல்லது எம்எல்ஏ விற்கு எதிராக வாக்களித்தால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. 

►பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் பதவி நீக்கப்பட்டதை அறிவிப்பாக வெளியிட வேண்டும்.. 

►வாக்காளர்களுக்கு இந்த உரிமையை தரும் வகையில் 1951 ஆம் ஆண்டு வந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

http://ns7.tv/ta/tamil-news/india/2/3/2017/well-was-not-duty-mp-mla-bill-callback

Related Posts: