சனி, 4 மார்ச், 2017

ஆர்எஸ்எஸ் ஆட்களின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என பினராயி விஜயன் பதிலடி!

ஆர்எஸ்எஸ் ஆட்களின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என பினராயி விஜயன் பதிலடி!
தனது தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்  மிரட்டல் விடுத்துள்ளதை கண்டு அஞ்ச மாட்டேன் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் பினராயி விஜயன். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குந்தன் சந்திரவாத் என்பவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்  என அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை எற்படுத்தியது. 

இதனிடையே குந்தன் சந்திரவாத் கருத்துக்கு எதிராக பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தையடுத்து, தான் கூறியது தனது  சொந்த கருத்து என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இதுபோன்ற கொடூர மிரட்டலுக்கு எல்லாம் தாம்  அஞ்சப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி தெரிவித்துள்ளார். 
http://ns7.tv/ta/tamil-news/india/2/3/2017/i-will-not-affraid-rss-people-threatening-says-kerala-chief-minister