புதன், 17 மார்ச், 2021

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : புதிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

16.03.2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் பின்பற்றவேண்டிய புதிய விதிமுறைகள் வரையெறுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் தீவிர தாக்கதலை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில், உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு 12 கோடியை கடந்துள்ள நிலையில், அதிக தொற்றுபாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது.  இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.

ஆனால் பெரும் முயற்சிக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு முதல் ஆளாக தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா, கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிக்கு பெரும் பலன் கிடைத்ததை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து பொதுமக்களும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதில் தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 800 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, 50 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் 5,000-ஐ தாண்டியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசின் முன்மை செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறைகளின் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் வரையெறுக்கப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் பொதுமக்கள் முக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியோர் கண்கானிக்க வேண்டும். இந்தை வழிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், உணவகங்களுக்கு வரையெறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கிருமி நாசினி தெளித்து, மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், அத்தியாவசிய பொருட்களை வாங்கும்போது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். கூட்டாக நோய் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில்,  உரிய அலுவலர்களை நியமித்து நோய் கட்டுப்படு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் முகாம்களை அதிகரித்து  நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் தொற்று உள்ள பகுதிகளில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.  தகுதியுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். நோய் தொற்றால் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ள நபர்கள் கடந்த ஆண்டைபோல கண்கானிக்க வேண்டும்.

மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பிரச்சாரங்கள், கலாச்சார வழிபாடுகள், மற்றும் பிற பகுதகளில் பொது இடங்களில் மக்கள் முக்கசவம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.  அதனை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என புதிய வழிமுறைகள் வரையெறுக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-corana-update-new-guideline-in-state-government-283777/