செவ்வாய், 16 மார்ச், 2021

இந்திய இளைஞர்களின் முதல் கவலை வேலையின்மை; முதல் தேர்வு அரசு வேலை: முழு புள்ளிவிவரம்

 2020 இல் இந்திய மக்கள்தொகையின் சராசரி வயது 28.4 ஆக இருந்தது. இளைய தலைமுறை நாடாக திகழ்வதோடு மட்டுமல்லாம் தொழிலாளர் சமூகத்தினருக்கான நாடாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதும், தரமான கல்வியை அணுகுவதும் இன்றைய இளம் தலைமுறையினரின் நிறைவேறாத கனவாகவே உள்ளது.

இளைஞர் ஆய்வு 2016 மற்றும் தேசிய தேர்தல் ஆய்வுகள் 2019 ( வாக்கெடுப்பு முன் மற்றும் வாக்கெடுப்புக்கு பிந்தைய 2019). போன்ற அறிக்கையில் இருந்து பெறப்பட்ட சில புரிதல்களை இங்கே பகரிந்து கொள்கிறோம்.


இளம் தலைமுறையினரின் தேடல் என்ன? :

2016 இளைஞர் ஆய்வறிக்கையில், இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை எதுவென்று கேட்டபோது, ​​ஐந்தில் ஒரு பங்கு (19%) இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு தேசிய தேர்தல் அறிக்கை ( வாக்கெடுப்புக்கு முந்தைய) வாக்கெடுப்பில், 25 சதவிகித இளைஞர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் போது வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகளையே முன்னிலைப்படுத்தினர்.இந்த விதிதாச்சாரம், பெரும்பாலும் இந்தி பேசும் மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய (29%) மற்றும் வட இந்திய மாநிலங்களில் (34%) அதிகமாக இருந்தது. தென்னிந்தியாவில் (16%) மிகவும் குறைவாக இருந்தது. டெல்லி (50%), தெலுங்கானா (40%), ஹரியானா (39%), பஞ்சாப் (36%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன. .

பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துரைக்க வாக்களிப்புக்கு முந்தைய வாக்கெடுப்பில் மேலும் இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டிருந்தது. மத்தியில், கடந்த 5 ஆண்டு பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயக ஆட்சியின் போது வேலை வாய்ப்புகள் அதிகரித்துது (அ) குறைந்தது என்ற கேள்விக்கு, ​​45% இளைஞர்கள் குறைந்துவிட்டதாகவும், 28% பேர் அதிகரித்ததாகவும் பதிலளித்தனர். இரண்டாவது கேள்வியாக, கடந்த 3-4 ஆண்டுகளில் ஒரு புதிய வேலை வாய்ப்புகளை அடையாளம் காண்பது கடினமாகிவிட்டது (அ) எளிதாகிவிட்டது என்ற கேள்விக்கு, கிட்டத்தட்ட 49% இளைஞர்கள் கடினமாகிவிட்டதாகவே பதிலளித்தனர்.

கிராமங்களிலும் ((49%)), பட்டணங்களிலும் (49%), பெரு நகரங்களிலும் (51%) வேலைவாய்ப்புகள் தொடர்பான கவலைகள் மிகவும் ஒத்ததாக உள்ளது என்பதை விளக்கப்படம் 2ன் மூலம் நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.கோவிட் -19 நோய்த் தொற்று பரவல் மற்றும் தொடர்ச்சியான பொதுமுடக்க நிலை காரணமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் மேலும் உயர்ந்து வரும் சூழல், பிரச்சனையின் தீவிரத்தை மேலும் மோசமானதாக்குகிறது.

பணிகள் பற்றிய கவலை?

2016 இளைஞர் ஆய்வரிக்கையில், பத்தில் ஒன்பது (85%) இளைஞர்கள் தங்கள் பணிகள் குறித்தும் தொழில்கள் குறித்தும் கவலை தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட பாதி பேர் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும், நான்கில் ஒருவர் சற்றே கவலைப்படுவதாகக் கூறினார் (படம் 3).

மிகுந்த கவலை கொள்வதாக பதில் அளித்தவர்களில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே கணிசமான இடைவெளி காணப்படுகிறது (சுமார் 10 சதவீத புள்ளிகள்) .நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் அதிக எண்ணிகையில் உள்ளனர் என்பது பிரச்சனையின் மற்றொரு கோணத்தை காட்டுகிறது (விளக்கப் படம் 4).

வாக்கெடுப்புக்குப் பிந்தைய தேசிய தேர்தல் அறிக்கையிலும் இளைஞர்களின் நிலைப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது. உதாரணாமாக இந்த வாக்கெடுப்பில் இளைங்ஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை பிரச்சினை எவ்வளவு தீவிரமானது? என்ற கேள்விக்கு ஐந்தில் மூன்று (62%) பங்கு இளைஞர்கள் மிகக் கடுமையான பிரச்சினை என்றும், நான்கில் ஒரு பங்கு (25%) சற்றே தீவிரமான பிரச்சினை என்றும் பதிலளித்தனர்.

Telling Numbers: Young India’s first concern is lack of jobs, first choice is in govt

.அரசு வேலை/ தனியார் நிறுவனம் அல்லது சுயதொழில் ?

அரசு நிறுவனங்களில் போதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருந்தாலும், அதிகப்படியான இளம் தலைமுறையினர் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர். 2016 இளைஞர் ஆய்வறிக்கையில், மூன்றில் இரண்டு பேர் அரசு பணிகளைத் தேர்ந்தெடுத்தனர். நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் அரசுப் பணிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றனர். பத்தில் ஒன்றுக்கு குறைவான மாணவர்கள் மட்டுமே தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தனர் (விளக்கப்படம் 5 & 6).

அதிகப்படியான இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இன்னும் பணியிடங்களுக்கு நுழையாத, அதே சமயம் தரமான கல்வியைக் கோரும் இத்தகைய பிரிவினர் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தை உணர வ எண்டும். அதேசமயம், தொழிலாளர் சமூகத்தில் சேரத் தயாராக இருக்கும் இளைங்கர்களுக்கு கூடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.போதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படாத காரணத்தினால், மாணவர்கள் சிலர் வேறு வழியில்லாமல் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர்.

2050 ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையின் சராசரி வயது 38 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இன்றைய வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள்தொகையை பிரதிபலிகிக்றது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு தீவிரமான தருணம். மக்கள் தொகை பங்களிப்பை நாம் உணர வேண்டும். இளைஞர்களின் மீது நாம் கண்ணோட்டம் செலுத்தி, 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தில் அவர்கள் தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள தேவையான திறன்கள் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2016 இளைஞர் ஆய்வறிக்கையில், கால் பகுதி எண்ணிக்கையிலான இளைஞர்கள் (24%) தங்கள் “மாணவர்கள்” என்று சுயமாக அறிவித்தனர். இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, ​​இந்த மாணவர்களில் பெரும் பகுதியினர் அரசு பணிகளுக்கான மற்றொரு விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கலாம் (அ)/ ஏதேனும் வேலைவாய்ப்பு இணையதளங்களில் தங்கள் வாழ்கையை தேடி கொண்டிருக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

source https://tamil.indianexpress.com/explained/india-unemployement-crisis-youngest-country-population-india-job-crisis-282473/