இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, பிரசித்தி பெற்ற அந்தியூர் மாட்டு சந்தை வெறிச்சோடியது. இதனால், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
மிகவும் பழமையான இந்த கால்நடை சந்தைக்கு, தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் மாடுகளை வாங்கவும்,விற்பனை செய்வதும் வழக்கம். மேலும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும் மாடுகளை வாங்கி செல்ல இங்கு வருகை தருகின்றனர். மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்தகூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, வியாபாரிகள் யாரும் கால்நடைகளை விலைகொடுத்து வாங்க முன்வராததால் மாட்டு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் திரும்ப அழைத்துச் சென்றனர்.