செவ்வாய், 30 மே, 2017

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி.. ஈழத்தமிழர் அஞ்சலிக்கு தடையா? எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் சுளீர்

சென்னை: முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் உள்பட மற்ற மூவர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை வெளியே வர முடியாமல் அட்டூழியம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திரைப்பட இயக்குநர்கள் சார்பில் இன்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் இயக்குநர் அமீர் பேசியதாவது:
ஆண்டு தோறும் நடந்து கொண்டிருந்த ஈழத்தமிழர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைபெறாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இங்கே என்ன நடக்கிறது?
500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்றுகளையே ஐரோப்பியர்கள் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். ஆனால் இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமாக வாழ்ந்து முன்னோடியாக திகழும் தமிழன் வரலாற்றை வேக வேகமாக மூடுகிறார்கள்.
மக்கள் எதை வேண்டும் என்று கேட்கின்றார்களோ அதை மூடிவிடுகிறார்கள். எது வேண்டாம் என்று சொல்கின்றனரோ அதனை திறக்கிறார்கள். இது என்ன நியாயம். ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று மக்கள் குரல் எழும்பியும் என்ன பலன்?
மத்திய அரசுக்கு பயந்து அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஐடி ரெய்டுக்கு பயந்து இதெல்லாம் நடக்கிறது. பாஜக கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்று அமீர் குற்றம்சாட்டினார்.
http://kaalaimalar.in/ameer-viral-speech-condemns-tn-govt/