சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாட்டுக் கறி விருந்து உண்ணும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சூரஜ் எனும் மாணவர், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மாணவர் சூரஜை, வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக சூரஜின் நண்பர் அபினவ், நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஐஐடி டீனிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தாக்கப்பட்ட மாணவர் சூரஜின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.