திங்கள், 29 மே, 2017

மாட்டிறைச்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற கேரள அரசு திட்டம்..! May 29, 2017

மாட்டிறைச்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற கேரள அரசு திட்டம்..!


எந்த உணவு வகைகளை மக்கள் உண்ண வேண்டும் என்பதற்கு டெல்லியிலும் நாக்பூரிலும் இருந்து மக்களுக்கு உத்தரவிடத் தேவையில்லை எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது  குறித்துக் கருத்துத் தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மக்கள் தங்கள் உடல்நலனுக்கும், ஊட்டச்சத்துக்கும் தேவையான உணவுகளைக் காலங்காலமாகப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். 

அதனால் மக்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று டெல்லியில் இருந்தும் நாக்பூரில் இருந்தும் உத்தரவிட வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் விருப்பப்படி உணவுகளை உண்ண மாநில அரசு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கும் என்றும், மத்திய அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதித்ததை முறியடிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றத் தீர்மானித்துள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்