திங்கள், 29 மே, 2017

தமிழகத்தை மீண்டும் மிரட்ட வருகிறது கனமழை.? வந்தாச்சு..மோரா புயல்..! சென்னை மக்களே உஷார்..!

தானே புயல் கடலூர் பகுதியை சீரழித்தது.அதனை தொடர்ந்து செபலா, மெஹ் என்று இரண்டு புயல்கள் அரபிக் கடல் பகுதியில் உருவானதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
2015ம் ஆண்டில் எல்நினோ என்ற புவியியல் மாற்றம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி காரணமாக ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாகவும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட கியாண்ட், நடா ,வர்தா புயல் காரணமாக தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டம் முழுவதும் 97 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்படியான கனமழை பெய்தது.
இதனால் சென்னை நகரம் நீரில் முழ்கியது. இந்தநிலையில் வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி 720 கி.மீ தொலைவில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன்,காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு மோரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் எனவும், மோரா புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், பாம்பன், ராமநாதபுரம், தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் அந்த பகுதியில் நீடித்தால் 2015ம் ஆண்டில் ஏற்பட்ட கனமழையை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் எதிரொலியாக நேற்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் மீன்பிடி துறைமுகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இதில் சென்னை மக்கள் உஷாராக இருக்க வேண்டும். கடந்த காலத்து கசப்பான அனுபவங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை மனப்பான்மையையும், புயலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையையும் உருவாக்கி இருக்கும்
http://kaalaimalar.in/storm-warning-mora/