செவ்வாய், 30 மே, 2017

உஷார் மக்களே !!


 
தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான மோரா புயல் கொல்கத்தா அருகே நிலை கொண்டிருந்தது.
இன்று காலை 6 மணியளவில் வங்கதேசத்தின் துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே மோரா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயலானது வங்க தேசத்தை தாக்கியதால் அப்பகுதியில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோரா புயலால் சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சென்னையின் வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். மேலும் இன்று பெரிய மாற்றங்கள் ஒன்றும் இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதிய நேரத்தில் சற்று வெப்பம் அதிகமாக இருந்தது.

http://kaalaimalar.in/a-cyclonic-storm-mora/