திங்கள், 29 மே, 2017

இறைச்சி தடை பட்டியலில் இருந்து எருமை நீக்கம்? – மத்திய அரசு பரிசீலனை….!

இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை பட்டியலில் இருந்து எருமையை நீக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடைவிதித்து மத்திய அரசு ஆணை பிறபித்து இருந்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கேரளா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். மேலும் இந்த அரசாணையை தங்கள் மாநிலங்களில் அமல் படுத்த முடியாது எனவும் தெரிவித்து விட்டனர்.
தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர்கள் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதுவும் கருத்து கூட இயலாது என தெரிவித்துள்ளார்.
ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே எடப்பாடி இவ்வாறு கண்டும் காணாததும் போன்று செயல்படுகிறார் என
 எதிக்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டும் இலவசமாக மக்களுக்கு வழங்கியும் வருகின்றனர்.
மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை பட்டியலில் இருந்து எருமையை நீக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாட்டிறைச்சி குறித்து தொடரும் சர்ச்சையால் மத்திய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

http://kaalaimalar.in/beef-banned-issue-buffalo-relieves-order/