திங்கள், 29 மே, 2017

மாடுகள் விற்க தடை.. ஜல்லிக்கட்டுக்கு வைக்கப்படும் ஆப்பு..! நாட்டு மாடுகள் அழியும்..! பீட்டாவிற்கு உதவி செய்யும் நாதாரி மோடி அரசு !! – தமிழனே விழித்து கொள் !!

மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அதன்படி பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகள் மட்டுமே விற்கவோ, வாங்கவோ முடியும். Êசந்தைகளில் இறைச்சிக்காக விற்கப்படுவதில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என மத்திய அரசு கூறி உள்ளது.
இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தனி திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்து உள்ளது.
மாட்டு விற்பனை கட்டுப்பாட்டால் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். சந்தைகளில் காளை மாடுகள் வாங்குவது அவ்வளவு எளிதாக இருக்காது. ஜல்லிக்கட்டு காளைகள் படிப்படியாக குறையும். காளைகள் இல்லையெனில் ஜல்லிக்கட்டுகள் போட்டிகள் நடப்பது குறையும்.
அப்படியே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதும் நின்று விடும். மேலும் நாட்டு மாடுகள் இனத்தையும் மெல்ல மெல்ல அழிக்கும். பீட்டா இதைத்தானே எதிர்பார்த்தது. பீட்டாவின் கைவரிசை நன்றாகவே வேலை செய்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

http://kaalaimalar.in/jallikattu-again-ban-2/