ஞாயிறு, 28 மே, 2017

“பத்திரிகையாளர்களை ஷூ காலால் நசுக்க வேண்டும் – பா.ஜ.க. அமைச்சரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை!


மஹாராஷ்டிராவில் முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.பட்னாவிசின் அமைச்சரவையில் , சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் திலீப் காம்ளே.
அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காம்ளே, பத்திரிகையாளர்கள் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“பணத்திற்காக பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள். அவர்களை ஷூ காலால் மிதிக்க வேண்டும்” காம்ளேயின் இத்தகைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவதூறான இப்பேக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் ஸ்வாந்த், ” உரிய பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் பத்திரிகையாளர்களை இப்படி தரம் தாழ்ந்து பேசலாமா?இல்லை இப்படி பேச அவருக்கு பா.ஜ.க. பயிற்சி அளித்ததா? காம்ளேவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்ப்பு வலுத்து வருவதை அறிந்ததும் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த காம்ளே, பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் சிலரைத் தான் அப்படி கூறியதாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்தையும், ஊடகவியலார்கள் மீதும் தான் பெரு மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

http://kaalaimalar.in/minister-dilip-kambles-slip-of-tongue-use-abusive-words-for-journalists/