திங்கள், 29 மே, 2017

மாட்டு இறைச்சி விவகாரம் : தென் மாநிலம் ஒன்று கூடியது..! திராவிட நாடு ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது..! பயத்தில் மத்திய அரசு !! பீதியானது !!

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்து அதிரடி சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
விவசாய பயன்பாட்டிற்காக மட்டுமே மாடுகளை வாங்கவும், விற்கவும் சட்டத்தில் புதிய விதிமுறைகளையும் கொண்டு வந்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தடையால் மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும், ஒருவேளை சோற்றுக்கு பிச்சை எடுக்கும் நிலை வரும் என்று கூறிவருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திராவிடநாடு என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இதில் கேரள மாநிலத்தவர்கள், மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
கேரளாவில் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டங்கள்  தீவிரமாக நடை பெற்று வருகிறது. கேரள மாநிலத்தவர்களால் திராவிட நாடு ஹேஷ்டேக்  ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த ஹேஷ்டேக்கில், தமிழர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், கன்னடர்களும் கருத்துக்களை பதிந்து உலக அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். இது போல சமீபத்தில் மைல் கற்களில் தென் மாநிலத்தவர்கள் இணைந்து எதிர்ப்பை டிவிட்டரில் ஏற்கனவே பதிவு செய்து அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://kaalaimalar.in/dravida-nadu-hastag-trends/