புதன், 31 மே, 2017

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்செல்லத் தயாராகும் இஸ்ரோ!

மங்கள்யான், சந்திரயான் எனத் தொடர்ந்து விண்வெளித் துறையில் சாதனை நிகழ்த்தி வரும் இஸ்ரோ, அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இனி காணலாம்

விண்வெளிக்கு இந்தியர்கள் தயாராகும் இஸ்ரோ:

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட்டை வருகிற ஜீன் 5 அன்று விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இது இந்தியாவின் அதிக எடைகொண்ட ராக்கெட்டாகும். இதன் எடை கிட்டத்தட்ட 200 யானைகளின் எடைக்கு சமமானதாகும். இது 4 முதல் 8 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் திறன் கொண்டவையாகும்.

ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட் திட்டம் வெற்றியடைந்தால் 2 லிருந்து 3 பேரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு இந்தியா அனுப்பினால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும். இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட்டாக ரூபாய் 25ஆயிரம் கோடிக்கு மேலான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.