புதன், 31 மே, 2017

உணவு விஷயத்தில் அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது: கனிமொழி




மக்களின் உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பழனியில் திமுக பிரமுகர் இல்லத் திருமண வரவேற்புவிழாவிற்கு வருகை தந்த திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். 

சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களே சூரஜை, தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,  தமிழக அரசு எந்த விசயத்திலும் ஒரு நிலைப்பாடு எடுக்காதது போலவே, மாட்டிறைச்சி விஷயத்திலும் மவுனம் காப்பது தொடர்வதாக குற்றம்சாட்டினார்.