திங்கள், 29 மே, 2017

புதுசா என்ன செஞ்சாங்க..காங்கிரஸின் திட்டங்களை பெயர் மாற்றி அறிமுகம் செய்றாங்க. பாஜ மீது சிவசேனா கடும் தாக்கு!

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, இப்போது  பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பெயர் மாற்றி, புதிதாக அறிமுகம் செய்கிறது. புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று மத்தியிலும்,மஹாராஷ்டிரா அரசிலும் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது.
சிவசேனா தனது கட்சி நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் எழுதி இருப்பதாவது-
காங்கிரஸ் திட்டங்கள்
முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, இப்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பெயர் மாற்றி, புதிதாக அறிமுகம் செய்து வருகிறது. 
ரூபாய் நோட்டு தடை
பா.ஜனதா அரசில் எடுக்கப்பட்ட மிக துணிச்சலான முடிவு என்பது ரூபாய் நோட்டு தடை ஆகும். இதைத் தவிர புதிதாக எந்தவிதமான திட்டங்களையும் பா.ஜனதா அரசு அறிவிக்கவில்லை.
பாதிப்பு
ஆனால், இந்த ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் சமானிய மக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழில்துறை நடவடிக்கைகளை முற்றிலும் முடங்கி, ஐ.டி. தொழில்நுட்பத்துறையில்ஏராளமானோர் வேலை இழந்தனர்.
அரசு மகிழ்ச்சி
மோடி அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கு கடன் வழங்கும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை கடுமையாகப் பாதித்தது. பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருப்பதை நினைத்து அரசு மகிழ்ச்சி அடைகிறது. ஆனால், விவசாயிகளையும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும் வேறோடுஅழித்துவிட்டு இது வளர்ச்சி வந்துள்ளது.
யார் கொடுத்தது?
விவசாயிகள் கடினமாக சம்பாதித்து ஈட்டிய பணத்தை குப்பைக் கூடையில் வீசும் விதமான முடிவை  எடுக்க ரிசர்வ் வங்கிக்கு யார் அனுமதி கொடுத்தது?
பெயர்மாற்றி
சில முக்கியமான திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. அந்த திட்டங்களின் பணிகள் முடிந்தபின், அதற்கு புதிதாக பெயர் வைத்து, சுறுசுறுப்பாக மோடி அரசு தொடங்கி வைக்கிறது.
குறிப்பாக அசாம்-அருணாச்சலப்பிரதேச மாநிலங்களை இணஐக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புபென் ஹசாரிகா-சதியா பாலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனானி- நாஷ்ரி குகைப்பாதை ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://kaalaimalar.in/shivsena-oondemns-bjp-politics-modi/