செவ்வாய், 30 மே, 2017

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு! May 30, 2017

புதுச்சேரி மாவட்டத்தில் மருந்துக் கடை, பார்மசிகளை மூடுவதற்கு எதிராக  மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆன்லைன் மருந்து விற்பனையைக் கண்டித்து  மருந்து வணிகர்கள் தமிழகத்தில் இன்று  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியிலும் மருந்துக் கடைகள், பார்மசிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்துகள், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வருகிறது என்றும் மருந்துக்கடைகள், பார்மசிகள் மூடப்பட்டால் உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் கூறியுள்ளார். 

இதனால் இந்திய குற்றவியல் சட்டம் 1973-ன் கீழ் புதுச்சேரி மாவட்டத்தில் மருந்துக்கடைகள், பார்மசிகளை மூடுவதற்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி மருந்துக் கடைகள், பார்மசிகளை மூடக்கூடாது என்று கூறியுள்ள துர்சாவத், இந்த உதத்தரவை மீறுவோர்  மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.